யாப்பதிகாரம்472முத்துவீரியம்

      என்றிவை யெல்லா மிருசீர் முச்சீர்
      அடியொழித் தேனைய வடிகொடு வீரடிப்
      பஃறா ழிசையாற் பாடுவது பரணி.

என்பது, போர் முகத்து, ஆயிரம் யானையைக் கொன்ற வீரனைத் தலைவனாகக்
கொண்டு, கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலைநிலம், காளிகோயில், பேய்களோடு காளி;
காளியோடு பேய்கள் கூறத் தான்சொல்லக் கருதிய தலைவன் கீர்த்தி விளங்க, அவன்
வழியாகப் புறப்பொருள் தோன்ற, வெம்போர் வழங்க விரும்பல், இவை யெல்லாம்,
இருசீரடி, முச்சீரடி யொழித்து, ஒழிந்த மற்றடியாக, ஈரடிப் பலதாழிசையாற் பாடுவது
பரணியாகும். (79)

கலம்பகம்

1041. வெண்பாக் கலித்துறை யோடொரு போகு
     முதற்கலி மூன்றுறுப் பாக மொழிந்து
     வாகு வகுப்பு மதங்க மம்மனை
     காலஞ் சம்பிரதங் கார்தவங் குறமறம்
     பாண்களி யிரங்கல் சித்தூசல் கைக்கிளை
     தூதளி தழையிவை தோன்ற மடக்கு
     மருட்பா வகவல் வஞ்சி கலிப்பா
     அகவல் விருத்த மொடுகலித் தாழிசை
     கலிவிருத் தந்துறை காமரு வெண்டுறை
     விரவியந் தாதியாய் விளம்புங் காலைத்
     தேவர்க்கு நூறந் தணர்க்கைந் தொழித்தல்
     அரசர்க்குத் தொண்ணூ றைம்பது வசியர்க்
     காறைந்து சூத்திரர்க் காகப் பகர்தரல்
     கலம்பக மென்மனார் கற்றுணர்ந் தோரே.

என்பது, வெண்பா, கலித்துறை, ஒருபோகு முதற்கலியுறுப்பாக முற்கூறி, புயவகுப்பு,
மதங்கு, அம்மனை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து,
இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் இவ்வவயவங் களியைய,
மடக்கு, மருட்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியவிருத்தம், கலிவிருத்தம்,
கலித்தாழிசை, வஞ்சிவிருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறை என்னுமிவற்றால், இடையே
வெண்பா, கலித்துறை விரவி, அந்தாதித் தொடையான் முற்றுறக்