யாப்பதிகாரம் | 473 | முத்துவீரியம் |
கூறுங்கால், தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத்
தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத்
தொண்ணூறும், வைசியர்க்கு ஐம்பதும், சூத்திரர்க்கு
முப்பதுமாகப் பாடுவது கலம்பகமாகும்.
(80)
அகப்பொருட் கோவை
1042. முதல் கருவுரிப் பொருளொரு
மூன்றும்
அடைந்து கைக்கிளை யன்புடைக்
காமப்
பகுதிய வாங்கள வொழுக்கமுங்
கற்பும்
இயம்புத லேயெலை யாகக் கட்டளைக்
கலித்துறை நானூற் றாற்றிணை
முதலாத்
துறையீ றாகச் சொல்லப் பட்டும்
ஈரா றகப்பாட் டுறுப்பு மியையக்
கூறுவ தகப்பொருட் கோவையா
மற்றிஃ
தகவல்வெண் பாக்கலி யடுக்கியவ்
வண்ண
வஞ்சியி னானும் வழுத்தப் படுமே.
என்பது, இருவகையாகிய
முதற்பொருளும், பதினான்கு வகையாகிய
கருப்பொருளும், பத்துவகையாகிய வுரிப்பொருளும்
பெற்றுக், கைக்கிளை முதலுற்ற
அன்புடைக்
காமப்பகுதியவாம் களவொழுக்கமுந்,
கற்பொழுக்கமும் கூறலே
யெல்லையாகக் கட்டளைக் கலித்துறை நானூற்றால்,
திணை முதலாகத் துறையீறாகக்
கூறப்பட்ட பன்னிரண்டகப்பாட்டுறுப்பும் வழுவின்றித்
தோன்றப் பாடுவது
அகப்பொருட்கோவையாகும். இது
அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா வண்ணம்
இவற்றாலும் வழங்கப்படும். (81)
ஐந்திணைச் செய்யுள்
1043. புணர்தன் முதலிய வைந்துரிப்
பொருளும்
அணிபெறக் குறிஞ்சி முதலிய
வைந்திணை
இணையு மியம்புவ தைந்திணைப் பாவே.
என்பது, புணர்தன் முதலிய
வைந்துரிப் பொருளும் விளங்கக் குறிஞ்சி முதலிய
வைந்திணையையுங் கூறுவது ஐந்திணைச் செய்யுளாகும். (82)
வருக்கக் கோவை
1044. அகர முதலா கியவா
மக்கர
வருக்க மொழிக்கு முதல்வரு மெழுத்து
|