யாப்பதிகாரம் | 474 | முத்துவீரியம் |
முறையே
கட்டளைக் கலித்துறை யாக
வழுத்துவ ததுவே வருக்கக் கோவை.
என்பது, அகரமுதலாகிய
வெழுத்துவருக்கம் மொழிக்கு முதலாமெழுத்துக்
கட்டளைக் கலித்துறையாகப் பாடுவது
வருக்கக்கோவையாகும். (83)
மும்மணிக் கோவை
1045. அகல்வெண் பாக்கட்
டளைக்கலித் துறையும்
முறையே தொகைபெற முப்ப தடுக்கி
அந்தாதித் தொடை யாகச் செய்வது
மும்மணிக் கோவையா மொழியுங்
காலே.
என்பது, ஆசிரியப்பாவும்,
வெண்பாவும், கட்டளைக்கலித் துறையும் முறையே
தொகை முப்பது பெறவடுக்கிப் பாடுவது மும்மணிக்
கோவையாகும். (84)
அங்கமாலை
1046. ஆடுஉ மகடூஉ வாயிரு
பெயர்க்கும்
மிகவெடுத் துரைக்கு மெய்யவ
யவத்தை
வெண்பா வாயினும் வெளிவிருத்
தத்தின்
ஆயினுங் கேசாதி பாதம்
பாதாதி கேசமாகப் பாடுவ
தங்க மாலையா மாயுங் காலே.
என்பது, ஆண்மகனுக்கும்,
பெண்மகளுக்கும் மிக்கென வெடுத்துக் கூறுமவயவங்களை
வெண்பாவாலாயினும், வெளி
விருத்தத்தாலாயினும், பாதாதிகேசம்,
கேசாதிபாதம் முறை
பிறழாது தொடர்வுறப்பாடுவது அங்கமாலையாகும். (85)
அட்டமங்கலம்
1047. கடவுளைப் பாடியக் கடவு
டானே
காக்கவென் றகவல் விருத்த
மிருநான்
கந்தாதித் தறைகுவ தட்டமங்
கலமே.
என்பது, கடவுளைப் பாடி, அக்கடவுள்
காக்கவென ஆசிரியவிருத்தம் எட்டு
அந்தாதித்துப் பாடுவது அட்டமங்கலமாகும். (86)
|