யாப்பதிகாரம் | 477 | முத்துவீரியம் |
மணிமாலை
1056. எப்பொருண் மேலும்
வெண்பா
விருபதுங்
கலித்துறை நாற்பதுங் கலந்து வருவது
மணிமாலை யாகும் வழுத்துங் காலே.
என்பது, எந்தப் பொருண்மேலும்,
வெண்பாவிருபதும், கலித்துறை நாற்பதும் விரவிப்
பாடுவது மணிமாலையாகும். (95)
புகழ்ச்சிமாலை
1057. அகவ லடிகலி யடியு
மயங்கிய
வஞ்சியி னரிவையர் மாண்பை
யுரைப்பது
புகழ்ச்சி மாலையின் பொருளா
கும்மே.
என்பது, அகவலடியும், கலியடியும்
வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் பெண்களின்
சிறப்பைக் கூறுவது புகழ்ச்சிமாலையாகும். (96)
பெருமகிழ்ச்சிமாலை
1058. தெரிவை யெழில்குண
மாக்கஞ் சிறப்பை யுரைப்பது
பெருமகிழ்ச்சி மாலை யெனப்பெயர்
பெறுமே.
என்பது, பெண்கள் அழகும்,
குணமும், ஆக்கமும், சிறப்பும் முதலியன கூறுவது
பெருமகிழ்ச்சி மாலையாகும். (97)
வருக்கமாலை
1059. முதலாம் வருக்க வெழுத்தினுக்
கொவ்வொரு
செய்யு ளணிபெறச் செப்புவ ததுதான்
வருக்க மாலையாம் வழுத்துங் காலே.
என்பது, மொழிக்கு முதலாகும்
வருக்க வெழுத்தினுக்கு ஒவ்வொரு செய்யுட்
கூறுவது
வருக்க மாலையாகும். (98)
மெய்க்கீர்த்திமாலை
1060. சொற்சீ ரடியெனுங் கட்டுரைத்
தொடர்பாற்
குலமுறை யாற்றிய கீர்த்தியைக்
கூறன்
மெய்க்கீர்த்தி மாலையாம்
விளம்புங் காலே.
|