யாப்பதிகாரம்478முத்துவீரியம்

என்பது, சொற்சீரடி யென்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையிற் செய்த
கீர்த்தியைக் கூறுவது மெய்க்கீர்த்தி மாலையாகும். (99)

காப்புமாலை

1061. கடவுள் காத்த லாக வொருமூன்
      றைந்தே ழானு மறைவது காப்பு
      மாலை யெனப்பெயர் வைக்கப் படுமே.

என்பது, தெய்வங் காத்தலாக மூன்று செய்யுளானும் ஐந்து செய்யுளானும் ஏழு
செய்யுளானும் பாடுவது காப்பு மாலையாகும். (100)

வேனில்மாலை

1062. வேனி லொடுமுதிர் வேனிலும் புனைந்து
      விளம்புதல் வேனின் மாலை யாகும்.

என்பது, வேனிலையும் முதிர் வேனிலையும் சிறப்பித்துப் பாடுவது வேனின்
மாலையாகும். (101)

வசந்தமாலை

1063. தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த
      மாலை யெனப்பெயர் வைக்கப் படுமே.

என்பது, தென்றலை வருணித்துப் பாடுவது வசந்த மாலையாகும். (102)

தாரகைமாலை

1064. அருந்ததிக் கற்பி னரிவையர்க் குள்ள
      இயற்கைக் குணங்களை வகுப்பா லியம்புதல்
      தாரகை மாலையாஞ் சாற்றுங் காலே.

என்பது, அருந்ததிக் கற்பின மகளிர்க்குள்ள இயற்கைக் குணங்களை வகுப்பிற்
கூறுவது தாரகை மாலையாகும். (103)