யாப்பதிகாரம் | 480 | முத்துவீரியம் |
வெற்றிக் கரந்தை
1070. தழுவார் கொண்ட தந்நிரை
மீட்போர்
கரந்தை புனைந்து கனன்றுலவை
யிற்செலீஇ
மீட்பதைக் கூறல் வெற்றிக்
கரந்தை.
என்பது, பகைவர் கொண்ட
தந்நிரை மீட்போர் கரந்தைப் பூமாலை சூடிப்
போய்
மீட்பதைக் கூறுவது வெற்றிக் கரந்தை
மஞ்சரியாகும். (109)
போர்க்கெழுவஞ்சி
1071. போர்க்கெழு மன்னவர்
வஞ்சிப் பூத்தொடை
அணிந்து புறப்படு மடுபடை யெழுச்சிச்
சிறப்பக வலினாற் செப்புதல்
போர்க்கெழு
வஞ்சி யெனப்பெயர் வைக்கப்
படுமே.
என்பது, பகைவர் மேல்
போர்குறித்துப் போகின்ற வயவேந்தர்
வஞ்சிப் பூமாலை
சூடிப் புறப்படும்
படையெழுச்சிச் சிறப்பை யாசிரியப்பாவாற்
கூறுவது போர்க்கெழு
வஞ்சியாகும். (110)
வரலாற்று வஞ்சி
1072. விழுமிய குலமுறை பிறப்புமேம்
பாட்டின்
பலசிறப் பிசையையும் வஞ்சிப்
பாவால்
வழுத்தல் வரலாற்று வஞ்சியா
மென்ப.
என்பது, குலமுறை பிறப்பு
முதலிய மேம்பாட்டின் பல சிறப்பையும் கீர்த்தியையும்
வஞ்சிப்பாவாற் கூறுவது
வரலாற்று வஞ்சியாகும். (111)
செருக்களவஞ்சி
1073. போர்க்களத் திறந்த புரவி
நால்வாய்
மக்களுடலையும் வாயசங் கழுகு
பேய்நாய் பசாசம் பிடுங்கிப்
பருகிக்
களித்துப் பாடிய சிறப்பைக்
காட்டல்
செருக்கள வஞ்சியாஞ் செப்புங்
காலே.
|