யாப்பதிகாரம் | 481 | முத்துவீரியம் |
என்பது, போர்க் களத்தில் இறந்த
குதிரை யுடலையும் யானை யுடலையும்,
மனிதருடலையும்,
நாயும், பேயும், பிசாசமும் காகமும், கழுகும் தின்று,
களித்துப் பாடிய
சிறப்பைப் பாடுவது
செருக்கள வஞ்சியாகும். (112)
காஞ்சிமாலை
1074. காஞ்சி புனைந்து கருதா
ரூர்ப்புறம்
ஊன்றலை யுரைப்பது காஞ்சி மாலை.
என்பது, பகைவரூர்ப் புறத்துக்
காஞ்சி பூமாலை சூடி ஊன்றலைக் கூறுவது காஞ்சி
மாலையாகும். (113)
நொச்சிமாலை
1075. கோலிய மாற்றார்
கோட
லின்றி
நொச்சிவேய்ந் தகலெயி
னோக்குந் திறனை
வழுத்துத னொச்சி மாலை யாகும்.
என்பது, புறத்தூன்றிய
பகைவர் கோடலின்றி நொச்சிப் பூமாலை சூடித்
தன் மதில்
காக்குந் திறங்கூறுவது நொச்சிமாலையாகும். (114)
உழிஞைமாலை
1076. மாற்றா ரூர்ப்புறம் வளைதர
வுழிஞை
வனைந்து காலாள் வளைப்பது
கூறல்
உழிஞை மாலையா முணருங் காலே.
என்பது, பகைவர் ஊர்ப்புறஞ் சூழ
உழிஞைப்பூமாலை சூடிப்படை வளைப்பதைக்
கூறுவது
உழிஞைமாலையாகும். (115)
தும்பைமாலை
1077. தும்பைவேய்ந் தொனாரொடு
சூழ்ந்து பொருவது
சொல்வது தும்பை மாலை யாகும்.
என்பது, பகைவரொடு
தும்பைப்பூமாலை சூடிப்பொருவதைக் கூறுவது
தும்பைமாலையாகும். (116)
|