யாப்பதிகாரம் | 483 | முத்துவீரியம் |
என்பது, நெடிலடிச் செய்யுளால்
தொகுத்தது நெடுந்தொகை, குறளடிச் செய்யுளால்
தொகுத்து குறுந்தொகை, கலிப்பாவால் தொகுத்தது
கலித்தொகை போல்வன
தொகைநிலைச் செய்யுளாகும். (120)
ஒலியலந்தாதி
1082. பதினாறு கலையோ ரடியாக
வைத்து
நாலடிக் கறுபா னாலுகலை வகுத்துப்
பலசந்த மாக வணங்கலை வைப்பும்
வழுவாதந் தாதித்து முப்பது செய்யுட்
பாடுவ தெட்டுக் கலையானும்
வரப்பெறும்
அன்றியும் வெண்பா வகவல்
கலித்துறை
பப்பத் தாக வந்தா தித்துப்
பாடு வதுமா மொலியலந் தாதி.
என்பது, பதினாறுகலை
யோரடியாக வைத்து, இங்ஙனம் நாலடிக்கறுபத்து நாலுகலை
வகுத்துப், பலசந்தமாக வண்ணமும், கலைவைப்பும்
தவறாம லந்தாதித்து முப்பது
செய்யுட்பாடுவதும், சிறுபான்மை யெட்டுக்கலையானும்
வரப்பெறும். அன்றியும் வெண்பா,
அகவல், கலித்துறை ஆகிய இம்மூன்றையும் பத்துப்
பத்தாக அந்தாதித்துப்
பாடுவதும்
ஒலியலந்தாதியாகும். (121)
பதிற்றந்தாதி
1083. ஈரைந்து வெண்பாக்
கலித்துறை யீரைந்
தரும்பொருள் புலப்பட வந்தாதித்துப்
பாடு வனபதிற் றந்தாதி யாகும்.
என்பது, பத்துவெண்பா,
பத்துக்கலித்துறை, பொருட்டன்மை தோன்ற அந்தாதித்துப்
பாடுவது பதிற்றந்தாதியாகும்.
(122)
நூற்றந்தாதி
1084. வெண்பா நூற்றினா லேனுங்
கலித்துறை
நூற்றினா லேனு மந்தாதித்
துரைப்பது
நூற்றந் தாதியா நுவலுங் காலே.
|