யாப்பதிகாரம் | 484 | முத்துவீரியம் |
என்பது, நூறு வெண்பாவினாலேனும் நூறு
கலித்துறை யினாலேனும் அந்தாதித்துக்
கூறுவது
நூற்றந்தாதியாகும். (123)
உலா
1085. இளமைப் பருவத்
தலைமகன் குலனுங்
குடியும் பிறப்பு மங்கலம்
பரம்பரை
இவற்றா னின்னா னென்பது தோன்ற
மாதர் நெருங்கிய வீதி யிடத்தவன்
பவனிவரப் பேதை முதலிய வேழு
பருவப் பெண்களும் பார்த்து
வணங்க
உலாவந்த தாக வுன்னி நேரிசைக்
கலிவெண் பாவாற் கழறுவ துலாவே.
என்பது, இளமைப் பருவத்
தலைமகனைக் குலம், குடி, பிறப்பு, மங்கலம், பரம்பரை
இவற்றா னின்னானென்பது தோன்ற,
மாதர் நெருங்கிய வீதியிடத்து அவன் பவனிவரப்,
பேதை முதலிய ஏழு பருவப் பெண்களும்
கண்டுதொழ உலாவந்ததாக, நேரிசைக்
கலிவெண்பாவாற் கூறுவது உலாவாகும். (124)
உலா மடல்
1086. கனவி லொருத்தியைக்
கண்ட கலவி
இன்ப நுகர்ந்தோன் விழித்த
பின்னவள்
பொருட்டு மடலூர்வே னென்பது
கலிவெண்
பாவான் முடிப்ப துலாமட லாகும்.
என்பது, கனவி லொருபெண்ணைக்
கண்டு கலவியின்பம் நுகரந்தோன், விழித்தபின்,
அவள் பொருட்டு மடலூர்வே
னென்பதைக் கலிவெண்பாவால் முற்றுவிப்பது உலா
மடலாகும். (125)
வளமடல்
1087. அறம்பொரு ளின்ப மாகிய பயனை
எள்ளி மகடூஉக் காமவின் பத்தைப்
பயனெனக் கொண்டு பாட்டுடைத்
தலைமகன்
இயற்பெயர்க் கெதுகை யியல்பு
நாடிப்
|