யாப்பதிகாரம் | 485 | முத்துவீரியம் |
பகர்ந்தவ் வெதுகைப் படத்தனிக்
கிளவி
இன்றி யின்னிசைக் கலிவெண்
பாவால்
தலைமக னிரந்து குறைபெ றாது
மடலே றுவதா யீரடி யெதுகை
வரப்பா டுவது வளமட லாகும்.
என்பது, அறம் பொருளின்பமாகிய
பயனை நிந்தித்து மங்கையர் காமவின்பத்தைப்
பயனெனக்கொண்டு, பாட்டுடைத் தலைமகன்
இயற்பெயர்க்குத் தக்கதை எதுகையாக
நாட்டிக்கூறி, அவ்வெதுகைப்படத்
தனிச்சொலின்றி, இன்னிசைக் கலிவெண்பாவாற்
றலைமகனிரந்து குறை பெறாது மடலேறுவதாய், ஈரடி
யெதுகையாக வரப்பாடுவது
வளமடலாகும். (126)
ஒருபா ஒருபது
1088. அகவல் வெண்பாக்
கலித்துறை
யாகிய
இவற்று ளொன்றினா லந்தாதித்
தொடையாய்
ஒருபஃ துரைப்ப தொருபா வொருபது.
என்பது, அகவல் வெண்பா,
கலித்துறை இவற்றொன்றினால் அந்தாதித்துப்
பத்துப்
பாடுவது ஒருபா வொருபதாகும். (127)
இருபா இருபது
1089. அகவல்வெண் பாவு
மந்தாதித் தொடையாய்
இருப தினைந்து வரவெடுத் துரைப்பது
இருபா விருபஃ தென்மனார் புலவர்.
என்பது, பத்து அகவலும்,
பத்து வெண்பாவும் அந்தாதித் தொடையால்
இருபதினைந்து வருவது இருபாவிருபதாகும். (128)
ஆற்றுப்படை
1090. அகவற் பாவால் விறலி
பாணர்
கூத்தர் பொருநர் நால்வரு ளொருவர்
பரிசிற் குப்போ வாரைப்
பரிசு
பெற்று வருவா ராற்றிடைக்
கண்டு
தலைவன் கீர்த்தியுங்
கொடையுங்
கொற்றமு
மறைவ தாற்றுப் படையா கும்மே.
|