யாப்பதிகாரம்486முத்துவீரியம்

என்பது, அகவற்பாவால், விறலி, பாணர் கூத்தர், பொருநர் இந்நால்வருளொருவர்
பரிசிற்குப் போவாரைப், பரிசு பெற்று வருவோர் ஆற்றிடைக் கண்டு, தலைவன் கீர்த்தியும்
கொடையும் கொற்றமும் கூறுவது ஆற்றுப்படையாகும். (129)

கண் படைநிலை

1091. அரசரு மரசர் தமைப்போல் வாரும்
     அவைக்க ணெடிது நாளாக வைகிய
     வழிமருத் துவரு மந்திரி மாரு
     முதலியோர் தமக்குக் கண்டுயில் கோடலைக்
     கருதி யுரைப்பது கண்படை நிலையே.

என்பது, அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியவழி,
மருத்துவரும் மந்திரிமாரும் முதலியோர்க்குக் கண்டுயில் கோடலைக் கருதிக் கூறுவது
கண்படை நிலையாகும். (130)

பெயரின்னிசை

1092. பாட்டுடைத் தலைமகன் பெயரைச் சார
      வின்னிசை வெண்பா வெழுபா னிருபஃ
      தேனு மெழுபா னேனு மைம்பஃ
      தேனு முரைப்பது பெயரின் னிசையே.

என்பது, பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார, இன்னிசை வெண்பாவால்,
தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது பெயரின்னிசையாகும். (131)

ஊரின்னிசை

1093. பாட்டுடைத் தலைமக னூரைச் சார
      இன்னிசை வெண்பா வெழுபா னிருபஃ
      தேனு மெழுபா னேனு மைம்பஃ
      தேனு மியம்புவ தூரின் னிசையே.

என்பது, பாட்டுடைத் தலைமகனூரைச் சார, இன்னிசை வெண்பாவால்
தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது ஊரின்னிசையாகும். (132)