யாப்பதிகாரம் | 489 | முத்துவீரியம் |
என்பது, நேரிசை வெண்பாவால்
அரசன் படைத்த தசாங்கத்தினைப் பத்துச் செய்யுட்
கூறுவது தசாங்கப்பத்தாகும். (140)
தசாங்கத் தயல்
1102. அரசன் றசாங்க மாசிரிய
விருத்தம்
ஐயிரண் டறைவது தசாங்கத் தயலே.
என்பது, அரசன் தசாங்கத்தை
யாசிரியவிருத்தத்தாற் பத்துச் செய்யுட் கூறுவது
தசாங்கத்தயலாகும். (141)
அரசன் விருத்தம்
1103. கலித்துறை பத்துங் கலித்தா
ழிசையும்
விருத்த முப்பதும் வெற்புநீர் நாடு
வருணனை யொடுநில வருணனை தாமும்
வாண்மங் கலமுந் தோண்மங்
கலமும்
அறைகுவ தரசன் விருத்த மாகும்.
என்பது, பத்துக்கலித்துறையும்
முப்பது விருத்தமும் கலித் தாழிசையுமாக, மலை
கடல் நாடு வருணனையும், நிலவருணனையும், வாண்மங்கலமும்,
தோண்மங்கலமும்
பாடிமுடிப்பது அரசன் விருத்தமாகும். இது முடிபுனைந்த
வேந்தற்காம். (142)
நயனப் பத்து
1104. பார்வையைப் பத்துப்
பாட்டா
லுரைப்பது
நயனப் பத்தென நவிலப்
படுமே.
என்பது, கண்களைப் பத்துச்
செய்யுளாற் கூறுவது நயனப்பத்தாகும். (143)
பயோதரப் பத்து
1105. பருமுலை பத்துப் பாவா
லறைவது
பயோதரப் பத்தெனப் பகரப் படுமே.
என்பது, முலையைப் பத்துப்
பாவாலுரைப்பது பயோதரப் பத்தாகும். (144)
|