யாப்பதிகாரம் | 490 | முத்துவீரியம் |
பாதாதி கேசம்
1106. கால்முதன் முடிவரை கலிவெண்
பாவாற்
பாடு வதுபா தாதி கேசம்
ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.
என்பது, கலிவெண்பாவால் அடிமுதன்
முடியளவும் கூறுவது பாதாதி கேசமாகும். (145)
கேசாதி பாதம்
1107. கலிவெண் பாவான் முடிமுதற்
கால்வரை
கிளத்தல் கேசாதி பாத மாகும்.
என்பது, கலிவெண்பாவான்
முடிமுதலடியளவும் கூறுவது கேசாதி பாதமாகும். (146)
அலங்கார பஞ்சகம்
1108. வெண்பா வகவல் கலித்துறை
யகவல்
விருத்தஞ் சந்த விருத்தமிவ்
வகையே
மாறி மாறியந் தாதித் தொடையாய்ப்
பாடுவ தலங்கார பஞ்சக மாகும்.
என்பது, வெண்பா, கலித்துறை,
அகவல், ஆசிரிய விருத்தம், சந்தவிருத்தம்
இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுள்
அந்தாதித்துப் பாடுவது அலங்கார பஞ்சகமாகும்.
(147)
கைக்கிளை
1109. ஐந்து விருத்தத் தாலே
யொருதலைக்
காமத் தைக்கூ றுவது கைக்கிளை.
என்பது, ஒருதலைக் காமத்தை ஐந்து
விருத்தத்தாற் கூறுவது கைக்கிளையாகும். (148)
இதுவுமது
1110. அன்றியும் வெண்பா
வாறைந் திரண்டு
பாடுவ ததன்பாற் படுமென மொழிப.
|