யாப்பதிகாரம்491முத்துவீரியம்

என்பது, ஈதல்லாமலும் முப்பத்திரண்டு வெண்பாவாற் பாடுவதுங் கைக்கிளையாகும். (149)

மங்கல வள்ளை

1111. மேற்குலத்திற் பிறந்த மின்னாளை வெண்பா
     ஒன்பதா லும்வகுப் பொன்பதி னாலும்
     வழுத்துவது மங்கல வள்ளை யாகும்.

என்பது, உயர்குலத்திற் பிறந்த மடவரலை வெண்பா வொன்பதாலும்
வகுப்பொன்பதாலும் பாடுவது மங்கலவள்ளையாகும். (150)

தூது

1112. ஆணும் பெண்ணும் மவரவர் காதல்
பாணன் முதலிய வுயர்திணை யோடுங்
கிள்ளை முதலிய வஃறிணை யோடுஞ்
சொல்லித் தூது போய்வா வென்னக்
கலிவெண் பாவா லறைவது தூது.

என்பது, ஆண்பாலும் பெண்பாலும், அவரவர் காதலை, பாணன் முதலிய
வுயர்திணையோடும், கிளிமுதலிய வஃறிணை யோடும் சொல்லித் தூது போய்வாவென்னக்
கலிவெண்பாவாற் கூறுவது தூதாகும். (151)

நாற்பது

1113. இடம்பொருள் கால மிவற்றி லொன்றனை
     வெண்பா நாற்பதால் விளம்ப னாற்பது.

என்பது, இடமும் பொருளும் காலமும் ஆகிய விவற்று ளொன்றனை நாற்பது
வெண்பாபாற் கூறுவது நாற்பதாகும். (152)

குழமகன்

1114. கலிவெண் பாவாற் காரிகை யார்கரங்
     கண்ட விளைமைத் தன்மையை யுடைய
     குழமகன் றன்னைப் புகழ்ந்து கூறுவது
     குழமக னாமெனக் குறிக்கப் படுமே.