யாப்பதிகாரம்493முத்துவீரியம்

என்பது, பொங்குதலின்றிப் புரையோர் நாப்பணிற் கூறல் கடனென,
அவையடக்கியற்பொருளும் மருட்பாவாற் பாடுவது செவியறிவுறூஉவாகும். (157)

வாயுறை வாழ்த்து

1119. கடுவும் வேம்புங் கடுப்பன வாகிய
     வெஞ்சொற் றாங்க மேவா தாயினும்
     பின்னர்ப் பெரிதும் பயன்றரு மென்ன
     மெய்ப்பொரு ளுறமருட் பாவால் விளம்புதல்
     வாயுறை வாழ்த்தென வைக்கப் படுமே.

என்பது, வேம்புங் கடுவும் போல்வனவாகிய வெஞ்சொற்கள், முன்னர்த் தாங்கக்
கூடாவாயினும் பின்னர்ப் பெரிதும் பயன்றருமென, மெய்ப் பொருளுற மருட்பாவாற்
கூறுவது வாயுறை வாழ்த்தாகும். (158)

புறநிலை வாழ்த்து

1120. வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப்
     பழிதீர் செல்வமோ டொருகாற் கொருகாற்
     சிறந்து பொலிவா யெனமருட் பாவாற்
     புகல்வது புறநிலை வாழ்த்தெனப் படுமே.

என்பது, வழிபடு தெய்வ நின்னைப் புறங்காப்பக் குற்றமில்லாத செல்வத்தோடு
ஒருகாலைக்கொருகால் சிறந்து பொலிவாயென்று மருட்பாவாலறைவது புறநிலை
வாழ்த்தாகும். (159)

பவனிக் காதல்

1121. காமரு முலாவற் காட்சி யாலே
     அடைந்த காம மிக்கால வற்றைப்
     பிறரொடு மெடுத்துப் பேசி வருந்துதல்
     பவனிக் காதலாம் பகருங் காலே.

என்பது, உலாக்காட்சியா லெய்திய காமமிக்கால், அவைபிறரொடு முரைத்து
வருந்துவது பவனிக்காதலாகும். (160)