எழுத்ததிகாரம் | 50 | முத்துவீரியம் |
இன் சாரியை
175. அவற்றுள்,
ஆமா கோவின் னடையவும்
பெறுமே.
(இ-ள்.) மேற்கூறிய
சாரியைகளுள் ஆ, மா, கோ இவை இன்சாரியை
பெறுதலுமாம்.
(வ-று.) ஆவை, ஆவினை, மாவை,
மாவினை, கோவை, கோவினை.
(வி-ரை.)
‘‘னகரம் ஒற்றும் ஆவும்
மாவும்’’ (தொல்-உயிர்-29)
‘‘ஓகார இறுதிக்கு ஒன்னே
சாரியை’’ (தொல்-உருபு-8)
என்பவற்றால் ஆ, மா
என்பன னகர வொற்றும், கோ என்பது ஒன் சாரியையும்
பெறும்
எனத்
தெரிகிறது. நன்னூலார்
‘‘ஆமா கோனவ் வணையவும்
பெறுமே’’
என்பர். இவ்வாசிரியர்
அவர்களின் வேறாக இன் சாரியை பெறும் எனக்கூறியது
புதியதாகும்.
(16)
அற்றுச் சாரியை
176. அற்றுறிற் சுட்டை
கானழி தருமே.
(இ-ள்.) அற்றுச்சாரியை
யுறிற்சுட் டைகாரங் கெடும்.
(வ-று.) அவை அவற்றை,
இவற்றை உவற்றை.
(வி-ரை.) அவை + அற்று =
அவற்றை, சுட்டு ஐகான் அழிதருமே‘ என்பதால் அவை
என்பதில் உள்ள ஐகாரம் கெட, நின்ற மெய்மேல்
உயிர் ஏறி முடிந்தது. தொல்காப்பியர்
வற்றுச்
சாரியை பெறும் என்பர், (தொல் - உருபு - 5) (17)
னகர ஈற்றுச் சாரியைகள்
177. னகர விறுதிநாற்
சாரியை னகரமும்
றகர மாகு நான்க னுருபிற்கு.
(இ-ள்.) னகரவிறுதியாகிய
இன், ஒன், அன், ஆன் ஆகிய நாற்சாரியையின் னகரமும்
றகரமாகத் திரியும், நான்காம் வேற்றுமை
யுருபிற்கென வறிக.
|