அணியதிகாரம் | 506 | முத்துவீரியம் |
எழுத்து மடக்கு
1140. ஓரெழுத் தொடுமுயி ரினுமுட
லினுமூ
வினத்தினும் வருமென விசைக்கப்
படுமே.
என்பது, ஓரெழுத்தினும்,
உயிரினும், மெய்யினும், வல்லினம், மெல்லினம்,
இடையினமாகிய மூவினத்தினும்
வரும், அவை, ஓரெழுத்துமடக்கு, உயிர்மடக்கு,
மெய்ம்மடக்கு, வல்லினமடக்கு, மெல்லினமடக்கு,
இடையினமடக்கு எனப் பெயர்
பெறும்.
(வ-று.)
நாநா நாதங் கூடிசை நாடுந்
தொழிலோவா
தாதா தார மாகவி ரைத்தண் மலர்மீதே
வாவா வார்தண் சோலையில் வாழும் வரிவண்டே
யாயா யாளிற் சேர்த்துவ தன்பற்
கிசையாயால்.
ஓரெழுத்துமடக்கு.
தாயாயா ளாராயா டாமாறா
தாராயா
யாமாரா வானாடா மாதாமா-தாவாவா
யாவாகா லாறாகா வாகாகா ணாநாமா
மாலாறா மாநாதா வா.
உயிரெழுத்து மடக்கு.
தத்தித்தா தூதுதி தாதூதித்
தத்துதி,
துத்தித் துதைதி துகைத்ததா-தூதுதி,
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது.
மெய்யெழுத்து மடக்கு.
துடித்துத் தடித்துத் துடிப்பெடுத்த
கோட
றொடுத்த தொடைகடுக்கை பொற்போற்-பொடித்துத்
தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு.
வல்லெழுத்து மடக்கு.
மானமே நண்ணா மனமென்
மனமென்னு
மானமான் மன்னா நனிநாணு-மீனமா
மானாமி னன்மின்னி முன்முன்னே நண்ணினு
மானா மணிமேனி மான்.
மெல்லெழுத்து மடக்கு.
|