அணியதிகாரம்507முத்துவீரியம்

யாழியல் வாய வியலள வாயலொலி
ஏழிய லொல்லாவா லேழையுரை-வாழி
உழையே லியலா வயில்விழி யையோ
இழையே லொளியா லிருள்.

இடையெழுத்து மடக்கு. (12)

சித்திரகவி

காதைகரப்பு

1141. யாப்பிறு மொழிமுத லக்கரந் தொடங்கி
     ஒவ்வோ ரெழுத்திடை யொழித்து வாசிக்க
     வேறொரு செய்யுள் விளைப்பது காதை
     கரப்பா மென்மனார் கற்றுணர்ந் தோரே.

என்பது, செய்யுளிறுதி மொழிக்கு முதலாகிய வெழுத்துத் தொடங்கி, ஓரெழுத்தை
நடுவினீக்கி வாசிக்க, வேறொரு பாவுண்டாகுவது காதை கரப்பணியாம்.

(வ-று.)

தாயேயா நோவவா வீரு வெமதுநீ
பின்னை வெருவா வருவதொ ரத்தப
வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்
தாவா வருங்கலநீ யே.

காதை கரப்பணி.

இதனுள்,
கருவார்கச்சித்,
திருவேகம்பத்,
தொருவாவென்னீ,
மருவாநோயே. (13)

கரந்துறைச் செய்யுள்

1142. ஓர்பா வினிலிருந் தோர்பாக் குரியன
     அக்கரம் பொறுக்கிக் கொளலா கும்படி
     பாடல் கரந்துறைப் பாட்டென மொழிப.

என்பது, ஒரு செய்யுளினின்று வேறொரு செய்யுட்குரிய வெழுத்துக்கள் பொறுக்கிக்
கொளலாகும்படிக்குப் பாடுவது கரந்துறைச் செய்யுளாம்.