அணியதிகாரம்508முத்துவீரியம்

(வ-று.)

அகலல்குற் றேரே யதர மமுதம்
பகர்தற் கரிதிடையும் பார்க்கின்-முகமதிய
முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல
மைத்தடங்கண் வெவ்வேறு வாள்.

கரந்துறைச் செய்யுளணி. 

இதனுள்,

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. (14)

வினாவுத்தரம்

1143. வினாவொடு விடையும் விரிந்து வருவது
      வினாவுத் தரமென விளம்பப் படுமே.

என்பது, வினாவும் விடையும் விரிந்து வருவது வினாவுத்தர வணியாம்.

(வ-று.)

வந்ததென் குரங்கொன் றில்லை யடைத்ததென் கடல்வாய் மந்தி
சிந்தையின் களிப்பா லென்னைத் தெரியுமோ தெரியா தென்றான்
இந்தநன் னகரி லங்கை யிறைவனோ தெரியு மென்றான்
விந்தைசேர் திருப்பு யத்து வீடண னென்னும் வேந்தே. (15)

எழுத்து வருத்தனவணி

1144. பதங்களி னக்கரங் களைப்பகுத் தொன்றற்
     குரியவக் கரங்களை மற்றொரு பதத்தொடு
     புணர்த்திநூ தனப்பொருள் புதுக்குவ தெழுத்து
     வருத்தன மாமென வழுத்தப் படுமே.

என்பது, சொற்களி னெழுத்துக்களைப் பிரித்து மற்றொரு சொற்குரிய
வெழுத்துக்களை வேறு சொற்களோடு சேர்த்து நூதனமான அருத்தங்களை யுண்டுபண்ணுவது
எழுத்து வருத்தனவணியாம்.

(வ-று.)

ஏந்திய சங்கமு முன்னா ளெடுத்ததுவும்
பூந்துகிலு மாலுந்தி பூத்ததுவும்-வாய்ந்த