அணியதிகாரம் | 509 | முத்துவீரியம் |
உலைவி லெழுத்தடைவே யோரொன்றா
யேற்றத்
தலைமலைபொன் றாமரை யென்றாம்.
இதனுள்-கம்-நகம்-கநகம்-கோகநகம்.
(16)
எழுத்தழிவணி
1145. ஒருபொருள் பயப்ப
தொருமொழி யிருந்ததில்
ஒவ்வோ ரக்கர மொழிக்கவெவ்
வேறு
சொல்லும் பொருளுந் தோன்றுவ தெழுத்தழி
வாகு மென்மனா ரறிந்திசி னோரே.
என்பது, ஒரு பொருளைத் தருவது ஒரு
சொல்லிலிருந்து, அதிலே யொவ்வொரு
எழுத்துக்
குறைக்க, வேறு வேறு சொல்லும் பொருளும்
தோன்றுவது எழுத்தழி வணியாகும்.
(வ-று.)
பொற்றூணில் வந்தசுடர்
பொய்கையில் வந்தவண்ணல்
சிற்றாயன் முன்வனிதை யாகி
யளித்த செம்மல்
மற்றியார் கொல் லென்னில்
மலர்தூவி வணங்கிநாளும்
கற்றோர்பரவு கநகாரிநகாரி காரி.
(17)
மாலை மாற்றணி
1146. இறுதி முதலாக வெடுத்துவா
சிப்பினும்
அதுவே யாவது மாலைமாற் றாகும்.
என்பது, கடைமுதலாக வெடுத்து
வாசித்தாலும் அச்செய்யுளே யாவது
மாலைமாற்றணி.
(வ-று.)
நீவாதமாதவா
தாமோகராகமோ
தாவாத மாதவாநீ. (18)
நிரோட்டக வணி
1147. இதழ்குவி யாவெழுத்
தெடுத்துப்
பாடுவ
ததுநிரோட் டகமென் றறையப்
படுமே.
என்பது, இதழ்குவியாத
எழுத்துக்களாலெடுத்துப் பாடுவது நிரோட்டக
வணியாம்.
|