எழுத்ததிகாரம் | 51 | முத்துவீரியம் |
(வ-று.) விளவிற்கு,
கோஒற்கு, அதற்கு, ஒருபாற்கு.
(வி-ரை.)
‘‘னஃகான் றஃகான்
நான்க னுருபிற்கு’’ (தொல் - புணரி - 21)
என்பது தொல்காப்பியம்.
(18)
அத்துச் சாரியை
178. அத்துறி னகரவீ றழியு
மென்ப.
(இ-ள்.) அத்துச்சாரியை
அகர வீற்றுச்சொன் முன் இல்லையாகும்.
(வ-று.) மகத்தை எனவரும்.
(வி-ரை.)
‘‘அத்தின் அகரம்
அகரமுனை யில்லை’’ (தொல்-புணரி-23)
என்பது தொல்காப்பியம்.
(19)
இக்குச் சாரியை
179. இக்குறி னிகர விறுதியு
மற்றே.
(இ-ள்.) இக்குச்சாரியை
இகரம் இகரவீற்றுச்சொன் முன்னில்லையாம்.
(வ-று.)
ஆடிக்குக்கொண்டான்.
(வி-ரை.) ஆடி + கொண்டான்
என்பது இக்குப் பெற்று ஆடிக்குக் கொண்டான்
எனவரும்.
ஆடித்திங்களில் கொண்டான் என்பது
பொருள்.
‘‘இக்கின் இகரம்
இகரமுனை யற்றே’’ (தொல்-புணரி-உச)
என்பது தொல்காப்பியம்.
(20)
இதுவுமது
180. ஐகான் முன்னரு மவ்விய
னிலையும்.
(இ-ள்.) இக்குச்சாரியை
இகரம் ஐகாரவீற்றுச்சொன் முன்னுமில்லையாம்.
(வ-று.)
சித்திரைக்குக்கொண்டான்.
|