| அணியதிகாரம் | 514 | முத்துவீரியம் |  
  
என்பது, குணமும், வினையும்,
      பயனும் ஆகிய இவற்றில் ஒன்றேனும் பலவேனும் 
      பொருளொடு
      பொருள் புணர்ந்துவமை தோன்றக் கூறுவது
      உவமையணி. 
      (வ-று.) 
      பண்பு: 
      ‘பவளத்தன்ன மேனி’. (குறுந்-1) 
      வினை: 
      அரிமாவன்ன வணங்குடைத் துப்பு.
      (பட்டின-298) 
      பயன்: (3) 
      மாரியன்ன வண்கை. (புறம்-132) 
      விரியுவமை 
      1157. விழுமிய குணமுதல் விரிந்து வருவது 
            விரியா மென்மனார் மெய்யுணர்ந்
      தோரே. 
      என்பது, குணமும், வினையும், பயனும்,
      விரிந்து வருவது விரியுவமை. 
      (வ-று.) 
      பால்போலு மின்சொற்
      பவளம்போற் செந்துவர்வாய்ச் 
      சேல்போற் பிறழுந் திருநெடுங்கண்-மேலாம் 
      புயல்போற் கொடைக்கைப் புனனாடன் கொல்லி 
      அயல்போலும் வாழ்வ தவர்.
      (தண்டி-மேற்) (4) 
      தொகையுவமை 
      1158. அக்குண முதலிய வடங்கி வருவது 
           தொகையா மெனப்பெயர் சூட்டப்
      படுமே. 
      என்பது, முற்கூறிய பண்பு முதலிய
      மூன்றும் தொக்கு வருவது தொகையுவமை. 
      (வ-று.) 
      அன்னங் கண்படு தண்பணை நிடதநா
      டளிக்கு 
      மன்னர் மன்னவன் மண்டமர்
      கடந்தவொள் வேலின் 
			
				
				 |