அணியதிகாரம் | 517 | முத்துவீரியம் |
சேலே பணியப் புலியுயர்த்த
செம்பியர்கோன்
வேலே விழிக்கு நிகர். (தண்டி-மேற்)
(11)
அநியமவுவமை
1165. நியமித்த வுவமையை
நீக்கிப் பிறிதொரு
பொருளொடு புணருவ தநியம மாகும்.
என்பது, நியமித்தவுவமையை
விலக்கி வேறொரு பொருளொடு புணருவது
அநியமவுவமை.
(வ-று.)
கௌவை விரிதிரைநீர்க்
காவிரிசூழ் நன்னாட்டின்
மௌவல் கமழுங் குழன்மடவாய்-செவ்வி
மதுவார் கவிரேநின் வாய்போல்வ தன்றி
அதுபோல்வ துண்டெனினு மாம்.
(தண்டி-மேற்) (12)
ஐயவுவமை
1166. ஐயுற் றிருமையு மறைகுவ
தைய
உவமை யென்மனா ருணர்ந்திசி
னோரே.
என்பது, உவமானப் பொருளையும்
உவமேயப் பொருளையும் ஐயமுற்றுக் கூறுவது
ஐயவுவமை.
(வ-று.)
தாதளவி வண்டு தடுமாறுந்
தாமரைகொல்
மாதர் விழியுலவு வாண்முகங்கொல்-யாதென்
றிருபாற் கவர்வுற் றிடையூச லாடி
ஒருபாற் படாதென் னுளம்.
(தண்டி-மேற்) (13)
தேற்றவுவமை
1167. ஐயுற் றதனை யறிந்து
துணிவது
தேற்ற மென்மனார் தெளிந்திசி
னோரே.
என்பது, ஐயுற்றபொருளைத்
தெளிந்து துணிவது தேற்றவுவமை.
(வ-று.)
தாமரை நாண்மலருந் தண்மதியால்
வீறழியுங்
காமர் மதியுங்
கறைவிரைவும்-ஆமிதனாற்
|