எழுத்ததிகாரம்52முத்துவீரியம்

(வி-ரை.) சித்திரை என்னும் ஐகார ஈறு இக்குப் பெற சித்திரை இக்கு என ஆகும்.
இந்நூற்பா விதியால் இகரம் கெட்டு சித்திரைக்கு என முடியும்.

‘‘ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும்’’ (தொல் - புணரி - 25)

என்பது தொல்காப்பியம். (21)

இதுவுமது

181. அக்கிறுகெடும்வலி யடையுங் காலே.

(இ-ள்.) வல்லெழுத்து வரிற் கடைநின்ற அக்குச்சாரியை கெடும்.

(வ-று.) குன்று + அக்கு + கூகை = குன்றக்கூகை.

(வி-ரை.) அக்கிறு கெடும்-அக்குச் சாரியையின் இறுதியான (கு) கெடும் என்பது
கருத்து.

‘‘எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி
அக்கின் இறுதிமெய் மிசையொடுங் கெடுமே
குற்றிய லுகரம் முற்றத் தோன்றாது’’ (தொல் - புணரி - (26)

எனவரும் தொல்காப்பியமும் காண்க. (22)

இன் சாரியை வாராத இடம்

182. இன்னின் றைந்தாம் வேற்றுமை யியலும்.

(இ-ள்.) ஐந்தாம்வேற்றுமை யின்சாரியையின்றி நடக்கும்.

(வ-று.) பலாவின்கோடு.

(வி-ரை.)

‘‘இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற்கு
இன்னென் சாரியை இன்மை வேண்டும்’’ (தொல் - புணரி - (29)

என்பர் தொல்காப்பியரும். (23)

உடம்படுமெய்

183. இ, ஈ, ஐவழி யவ்வு மேனை
     உயிர்வழி வவ்வு மேமுன்னிவ் விருமையும்
     உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.1

1. நன் - எழுத்து - உயிரீற்.