அணியதிகாரம் | 520 | முத்துவீரியம் |
என்பது, கூடாதவொரு பொருளைக்
கூடுவதாகக்கொண்டு, அதனை யொன்றற்குவமை
யாக்கிக் கூறல் கூடாவுவமை.
(வ-று.)
சந்தனத்திற் செந்தழலுந்
தண்மதியில் வெவ்விடமும்
வந்தனவே போலுமா னும்மாற்றம்-பைந்தொடியீர்
வாவிக் கமல மலர்முகங்கண் டேக்கறுவார்
ஆவிக் கிவையோ வரண். (தண்டி-மேற்)
(20)
பொதுநீங்குவமை
1174. உவமையைக் கூறி யொதுக்கிப்
பொருளை
உவமை யாக்கி யுரைப்பது
பொதுநீங்
குவமை யென்மனா ருணர்ந்திசி
னோரே.
என்பது, உவமையைச்
சொல்லிநீக்கிப் பொருளையுவமையாக்கிக் கூறல்
பொதுநீங்குவமை.
(வ-று.)
திருமருவு தண்மதிக்குஞ்
செந்தா மரையின்
விரைமலர்க்கு மேலாந் தகையாற்-கருநெடுங்கண்
மானே யிருளளகஞ் சூழ்ந்தநின் வாண்முகந்
தானே யுவமை தனக்கு. (தண்டி-மேற்) (21)
உருவக அணி
1175. உவமைப் பொருளுவ மேயப்
பொருளையும்
வேறுபா டொழித்தொன் றெனும்பொருள் விளங்க
உரைப்ப துருவக மாமுரை தரினே.
என்பது, உவமைப் பொருளையும்
உவமேயப் பொருளையும் வேறுபாடு நீக்கி
யொன்றெனும் பொருள் விளங்கக்கூறல் உருவகவணி.
(வ-று.)
பிறவிப் பெருங்கட னீந்துவர்
நீந்தார்
இறைவ னடிசேரா தார். (22)
தொகை யுருவகம்
1176. தொகுத்து ரைப்பது தொகையெனப்
படுமே.
|