அணியதிகாரம் | 522 | முத்துவீரியம் |
என்பது, பல பொருள்களையும் உருவகஞ்
செய்யுங்கால் தம்முளியை புடையனவாக
வைத்து
உருவகஞ் செய்தல் இயைபுருவகம்.
(வ-று.)
செவ்வாய்த் தளிரு நகைமுகிழுங்
கண்மலரு
மைவ்வா ரளக மதுகரமுஞ்-செவ்வி
உடைத்தாந் திருமுகமென்
னுள்ளத்துள் வைத்தார்
துடைத்தாரே யன்றோ துயர். (26)
இயைபிலுருவகம்
1180. இயைபிலி யியைபுடைத்
தின்றிப் போதுவ
ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.
என்பது, பல பொருளையுந் தம்மு
ளியைபிலாதுருவகஞ் செய்தல்
இயைபிலியுருவகம்.
(வ-று.)
தேனக் கலர்கொன்றை பொன்னாகச்
செஞ்சடைமேல்
கூனற் பவளக் கொடியாகத்-தான
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்
புழையார் தடக்கைப் பொருப்பு. (27)
வியனிலை யுருவகம்
1181. ஒன்றனங் கம்பல
வற்றினுள் ளுஞ்சில
உருவகஞ் செய்துசெய் யாமலு முரைப்பது
வியனிலை யென்மனார் மெய்யுணர்ந்
தோரே.
என்பது, ஒன்றனதவயவம்
பலவினுள்ளும் சிலவற்றை யுருவகஞ் செய்து,
செய்யாமலும் வருவது வியனிலை யுருவகம்.
(வ-று.)
செவ்வாய் நகையரும்பச்
செங்கைத் தளிர்விளங்க
மைவ்வா ணெடுங்கண் மதர்த்துலவச்-செவ்வி
நறவலருஞ் சோலைவாய் நின்றதே நண்பா
குறவர் மடமகளாங் கொம்பு. (28)
|