அணியதிகாரம்523முத்துவீரியம்

உருவக வுருவகம்

1182. ஒருபொரு ளுருவகஞ் செய்துமற் றப்பொருண்
     மீட்டு முருவகஞ் செய்வ துருவக
     உருவக மென்மனா ருணர்ந்திசி னோரே.

என்பது, ஒருபொருளை யுருவகஞ்செய்து அப்பொருளை மீட்டும் பிறிதொன்றாக
வுருவகஞ் செய்தல் உருவக வுருவகம்.

(வ-று.)

கன்னிதன் கொங்கைக் குவடாங் கடாக்களிற்றைப்
பொன்னெடுந்தோட் குன்றே புனைகந்தா-மன்னவநின்
ஆகத் தடஞ்சே வகமாக யானணைப்பல்
சோகித் தருளே றுவண்டு. (தண்டி-மேற்) (29)

ஏகாங்க வுருவகம்

1183. ஒருபொரு ளவயவம் பலவி னுள்ளும்
      ஒன்றனை யுருவகஞ் செய்துமற் றொன்றனை
      இயம்பா தகற்றுவ தேகாங்க மாகும்.

என்பது, ஒரு பொருளினுடைய அங்கம் பலவினுள்ளும் ஓரங்க முருவகஞ் செய்து,
ஓரங்கத்தை யுருவகஞ் செய்யாதுவிடல் ஏகாங்க வுருவகம்.

(வ-று.)

காதலனைத் தாவென் றுலவுங் கருகெடுங்கண்
ஏதிலனால் யாதென்னு மின்மொழித்தேன்-மாதர்
மருண்ட மனமகிழ்ச்சி வாண்முகத்து வந்த
இரண்டினுக்கு மென்செய்கோ யான். (தண்டி-மேற்) (30)

அனேகாங்க வுருவகம்

1184. ஒருபொரு ளவயவ மெல்லா முருவக
      மாக்கல னேகாங் கப்பொரு ளாகும்.

என்பது, ஒன்றனதங்கம் பலவற்றையு முருவகஞ் செய்தல் அனேகாங்க வுருவகம்.

(வ-று.)

கைத்தளிராற் கொங்கை முகிழ்தாங்கிக் கண்ணென்னு
மைத்தடஞ்சேன் மைந்தர் மனங்கலங்க-வைத்ததோர்