அணியதிகாரம்526முத்துவீரியம்

(வ-று.)

அடுக்கலையோர் கையினா லாயச் சிறுவன்
எடுக்குமென லாரறிவா ரீங்கு. (37)

தொடர்பின்மையணி

1191. காரண மோரிடத் திருப்பக் காரியம்
     வேறொரு மருங்கின் விளைவ தாக
     வரல்தொடர் பின்மையாம் வழுத்துங் காலே.

என்பது, காரணமொருவிடத் திருப்பக் காரியம் வேறோரிடத்துப் பிறந்ததாய் வரல்
தொடர்பின்மையணி.

(வ-று.)

வேறொரு மாதர்மேல் வேந்த னகநுதியால்
ஊறுதர விம்மா துயிர்வாடுங்-கூறின்
இருவரே மெய்வடிவி னேந்திழை நல்லார்
ஒருவரே தம்மி லுயிர். (தண்டி-மேற் ) (38)

தகுதியின்மையணி

1192. பொருத்தமில் பொருட்குத் தானொரு பொருத்தம்
      இயம்புவ தகுதி யின்மை யாகும்.

என்பது, பொருத்தமில்லாத பொருளுக்குத் தானொரு பொருத்தங்கூறல்
தகுதியின்மையணி.

(வ-று.)

பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளே-மின்போலு
மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்
கானவேன் முட்டைக்குங் காடு. (பொய்யாமொழியார்) (39)

தகுதியணி

1193. தகுதியா மிருபொரு டனக்குச் சம்பந்தம்
     அறைவது தகுதியென் றறையப் படுமே.

என்பது, தகுதியாகிய இரண்டு பொருள்களுக்குச் சம்பந்தங் கூறல் தகுதியணி.