அணியதிகாரம்528முத்துவீரியம்

ஒன்றற்கொன் றுதவியணி

1197. ஒன்றற் கொன்றுப கரித்தலை யுரைத்தல்
      ஒன்றற் கொன்றுத விப்பொரு ளாகும்.

என்பது, ஒன்றனுக்கொன் றுபகரித்தலைக் கூறல் ஒன்றற்கொன் றுதவியணி.

(வ-று.)

திங்களிர வால்விளங்குஞ் செப்புங் கதிர்த்திங்கள்
கங்குலினா லேவிளங்குங் காண். (44)

சிறப்பு நிலையணி

1198. ஆதார மில்லா திருப்பவா தேய
     இருப்பை யுரைப்பது சிறப்புநிலை யாகும்.

என்பது, ஆதாரப் பொருளில்லாதிருக்க ஆதேயப் பொருளிருக்கையைக் கூறல் சிறப்புநிலை.

(வ-று.)

தினகரனில் லாமலவன் செய்ய கதிர்க
ளினிதிலங்குந் தீபத் திருந்து. (45)

முறையிற் படர்ச்சியணி

1199. அடைவது பற்பல விடங்களி லொருபொருண்
     முறையிற் படர்ச்சி யாமென மொழிப.

என்பது, ஒருபொருள் பற்பல விடங்களி லுறைவது முறையிற் படர்ச்சி.

(வ-று.)

நஞ்சமே நீபண்டை நாளி னதிபதிதன்
நெஞ்சிலிருந் தாங்கதன்பி னீங்கியே-செஞ்சடிலச்
சங்கரனார் கந்தரத்திற் சார்ந்திக் கொடியோன்வாய்
தங்குதியிக் காலந் தனில். (46)

மாற்றுநிலையணி

1200. இழிவாம் பொருள்கொடுத் துயர்வா கியபொருள்
      வாங்குவ மாற்று நிலைப்பொரு ளாகும்.