எழுத்ததிகாரம்53முத்துவீரியம்

(இ-ள்.) இ, ஈ, ஐ முன் உயிர்வரின் யகரமும், மற்றைய வுயிர்முன் உயிர்வரின்
வகரமும், ஏ முன் உயிர்வரின் யகரவகரமு முடம்படு மெய்யாகும்.

(வ-று.) கரியழகு, தீயழகு, பனையழகு, விளவழகு, பலாவழகு, கடுவழகு, கூவழகு,
கோவழகு; சேவேறி, அவனேயவன்.

(வி-ரை.)

‘‘எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்’’ (தொல் - புணரி - 38)

எனத் தொல்காப்பியர் உடம்படுமெய் வரும் எனப் பொதுவாகவே கூறினர். இளம்பூரணர்
அதனை வகைப்படுத்தினர். அதனை யுளங் கொண்டு கூறிய நன்னூலார் கூற்றையே
இவ்வாசிரியரும் தழுவினர். (24)

கோ, மா என்பவற்றுக்குச் சிறப்புவிதி

184. கோமா முன்வரின் யகரமுங் குதிக்கும்.

(இ-ள்.) கோ, மா முன்னுயிர்வரின் வகரமேயன்றி யகரமு முடம்படுமெய்யாம்.

(வ-று.) கோயில், மாயிருஞாலம்.

(வி-ரை.) இவ்விதி புதியதும் இனிமையுடையதுமாகும். கோ + இல் = கோயில்.
இங்ஙனம் திரிபின்றிப் புணர்தற்கு ‘இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்’ (தொல் - உயிர்
- 91) எனத் தொல்காப்பியத்தில் விதியுண்டு. எனினும் யகர உடம்படுமெய் பெறுதற்கு
விதியில்லை. காரணம் உயிர்முன் உயிர் வருங்கால் உடம்படுமெய் பெற்றே வரும் என்பதை
நியதியாகக் கொள்ளாமையே யாகும். அன்றியும் கோ + இல் = கோவில் எனவும் வரும்
வழக்காறுண்டு. ஆனால் மாயிரு ஞாலம் என்பது மாவிரு ஞாலம் என வருவதில்லை. இதற்கு
விதி தேவையே. சங்கர நமச்சிவாயர் ‘‘மாயிரு ஞாலம்’’ என உரிச்சொல் ஆகார வீற்றின்
வழி யகரவுடம்படுமெய் வந்த தென்னையெனின், அஃது ‘‘இடையுரி வடசொலி னியம்பிய
கொளாதவும்’’ என்னுஞ் சூத்திரத்தான் அமையுமென்க எனக் கூறிப் புறனடையால்
அமைத்தனர். இவ் வாசிரியர் இவ்விரு சொற்களுக்கும் வழக்காறு தழுவி விதி கூறியது சுவை
பயப்பதாகும். (25)

உயிரீற்றின் முன் மெல்லினம்

185. இருவழி யினுமுயி ரிறுதி முன்னர்
     ஞ, ந, ம, ய வரினியல் பாமென மொழிப.

(இ-ள்.) அல்வழி வேற்றுமையினு முயிரீறாகிய சொற்களுக்கு முன் ஞ, ந, ம, யக்கள்
வரி னியல்பாகும்.