அணியதிகாரம் | 530 | முத்துவீரியம் |
என்பது, ஒருவன் செய்யத்
தொடங்கிய காரியம் வேறொரு காரண வுதவியா
லெளிதின் முடிதல் எளிதின்முடிபணி.
(வ-று.)
மதிநுதலாட் கியானூடன்
மாற்றத் தொழும்போ
துதவிமுகில் செய்தன் றொலித்து.
(50)
இன்பவணி
1204. முன்னிய காரிய முயற்சி
யில்லாமற்
சித்திப்ப தின்பமாஞ் செப்புங்
காலே.
என்பது, தானினைத்த காரியம்
முயற்சியின்றிக் கிடைத்தல் இன்பவணி.
(வ-று.)
தன்னா யகன்விழைந்த தையலையே
தூதாக
வன்னான்க ணுய்த்தா ளணங்கு. (51)
துன்பவணி
1205. கோதற விரும்பும் பொருளைக்
குறித்தே
ஏதமின் முயற்சி யெடுத்ததற்
கிகல்பொருள்
அடைவது துன்பமென் றறையப் படுமே.
என்பது, தான் விரும்பிய
பொருளைக் குறித்து முயற்சி செய்து அதற்குப்
பகையாகிய பொருளடைதல் துன்பவணி.
(வ-று.)
சோருஞ் சுடர்விளக்கைத் தூண்டு
கையிலவிந்த
தாருமிடர் கூர வகத்து. (52)
அகமலர்ச்சியணி
1206. ஒன்றன் குணங்குற் றங்களான்
வேறொன்
றற்கவை யுளவா தலையறி வித்தல்
அகமலர் பென்மனா ரறிந்திசி
னோரே.
என்பது, ஒன்றனது குணத்தினானும்
குற்றத்தினானும் வேறொன்றற்கு,
அவையுளவாதல்
அகமலர்ச்சியணி.
|