அணியதிகாரம்531முத்துவீரியம்

(வ-று.)

இக்கற்பி னண்மூழ்கித் தகைமை செயுமோ வெனையென்
றக்கங்கை கொள்ளு மவா. (53)

இகழ்ச்சியணி

1207. ஒன்றன் குணங்குற் றங்களால் வேறொன்
      றற்கவை யுளவா காமையைக் கூறல்
      இகழ்ச்சி யென்மனா ரியல்புணர்ந் தோரே.

என்பது, ஒன்றனது குணத்தினானும், குற்றத்தினானும், வேறொன்றற்
கவையுளவாகாமையைக் கூறல் இகழ்ச்சி.

(வ-று.)

ஆழ வமுக்கி முகக்கினு மாழ்கடனீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியுங் கணவனு நேர்படினுந் தன்றன்
விதியின் பயனே பயன். (54)

வேண்டலணி

1208. குற்றத் தாற்குணங் குறுகுத னோக்கி
      அக்குற் றத்தினை யவாவுதல் வேண்டல்
      அணியா மென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, குற்றத்தினாலே குணமுண்டாதலையறிந்து அக்குற்றத்தை விரும்பல்
வேண்டலணி.

(வ-று.)

வெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு
விருந்துசெய் துறுபெரு மிடியுங்
கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுநீ
கொடியனுக் கருளுநா ளுளதோ. (55)

மறையணி

1209. பொதுக்குணத் தாலிரு பொருள்களுக் குரிய
      வேற்றுமை வெளிப்படா திருப்பது மறையே.

என்பது, பொதுமைக் குணத்தால் இரண்டு பொருள்களுக்கு உரிய வேறுபாடு
தோன்றாமை மறையணி.