அணியதிகாரம் | 532 | முத்துவீரியம் |
(வ-று.)
பேதமுறத் தோன்றாதிப்
பேதையியற் கைக்சிவப்பாற்
பாதமுற வூட்டியசெம் பஞ்சு. (56)
பொதுமையணி
1210. ஓதிய வொப்புமை யாலிரு
பொருட்கு
விசேடம் விளங்கா திருப்பது
பொதுமை.
என்பது, ஒப்புமையா லிரண்டு
பொருள்களுக்கு விசேடம் விளங்காதிருப்பது
பொதுமையணி.
(வ-று.)
வண்பதும வாவி யடைந்தமட
வார்வதனம்
பண்பி னறியப் படா. (57)
மறையாமையணி
1211. ஓதும் பொதுக்குணத்
தொப்புமை யுடைய
விருபொருட் கொருகார ணத்தால்
வேற்றுமை
வெளிப்படன் மறையாமை யாம்விளம்
பிடினே.
என்பது, பொதுக்குணத்
தொப்புமையுடைய இரண்டு பொருள்களுக்கு ஒரு
காரணத்தால் வேற்றுமை தோன்றல் மறையாமையணி.
(வ-று.)
ஒழுகுறு மருவி யீட்ட மொலியினா
னகுவெண் டிங்கள்
பழகுறு முடற்க ளங்கால் பாகசா
தனன்கூர்ங் கோட்டு
மழகளி றுமிழ்ம தத்தான்
மலர்மிசைக் கடவு ளூர்தி
அழகுறு நடையா லன்றி யறிதரப்
படாவக் குன்றில். (பிரபுலிங்கலீலை) (58)
உலகவழக்கு நவிற்சியணி
1212. உலக வழக்கைத் தழுவி
யுரைப்பது
உலக வழக்கு நவிற்சி யாகும்.
என்பது, உலக வழக்கைத்
தழுவிக்கூறல் உலகவழக்கு நவிற்சியணி.
|