அணியதிகாரம் | 533 | முத்துவீரியம் |
(வ-று.)
அண்ணனீ பேசாதைந் தாறுமா
தம்வரையிற்
கண்ணைமூ டிக்கொண் டிரு. (59)
வல்லோர் நவிற்சியணி
1213. உலக வழக்கத் தொடுவே
றொருபொருண்
மனங்கொண் டிருப்பது வல்லோர்
நவிற்சி.
என்பது, உலகவழக்கச் சொல்லோடு
வேறொரு பொருளுட் கொண்டிருப்பது
வல்லோர்
நவிற்சியணி.
(வ-று.)
பறிமலர்ப்பூங் குஞ்சியாய்
பாம்பேபாம் பின்கா
லறியுமுல கத்தென் றறி. (60)
தீபகவணி
1214. குணந்தொழி லாக்கங்
குலங்குறித் தொருசொல்
ஒருவயி னின்றும் பலவயிற்
பொருடரின்
தீபக மூவிடத் தியலு மென்ப.
என்பது, பண்பும் வினையும்
பொருளும் சாதியும் குறித்தொரு சொல் ஓரிடத்திருந்தும்
பலவிடத்திருக்கும்
பொருளைத்தரின் தீபகவணியாம், அது முதலிடை
கடையாகிய
மூன்றிடத்தினும் புலப்படுமெனவே,
முதனிலைத்தீபகம், இடைநிலைத்தீபகம்,
கடைநிலைத்தீபகமென மூன்றாம், அவை, குணம்,
தொழில், சாதி, பொருள்
என்பவற்றோடும் கூடிப்
பன்னிரண்டாம்.
(வ-று.)
முதனிலைக் குணத்
தீபகவணி.
சேந்தன வேந்தன் றிருநெடுங்கண்
டெவ்வேந்தர்
ஏந்து தடந்தோ ளிழிகுருதி-பாய்ந்த
திசையனைத்தும்
வீரச்சிலைபொழிந்த வம்பு
மிசையனைத்தும் புட்குலமும்
வீழ்ந்து. (தண்டி-மேற்)
முதனிலைத் தொழிற் றீபகம்.
சரியும் புனைசங்குந்
தண்டளிர்போன் மேனி
வரியுந் தனதடஞ்சூழ் வம்புந்-திருமான
ஆரந் தழுவுந் தடந்தோ ளனபாயன்
கோரந் தொழுத கொடிக்கு.
(தண்டி-மேற்)
|