| அணியதிகாரம் | 534 | முத்துவீரியம் |  
  
    முதனிலைச் சாதித்தீபகம். 
      தென்ற லனங்கன்
      றுணையாஞ் சிறுகொம்பர் 
      மன்றற் றலைமகனாம் வான்பொருண்மேற்-சென்றவர்க்குச் 
      சாற்றவிடு தூதாகுந் தங்கும்
      பெரும்புலவி 
      மாற்ற வருவிருந்து மாம்.
      (தண்டி-மேற்) 
      முதனிலைப் பொருட் டீபகம். 
      முருகவேள் சூர்மா முதறடிந்தான்
      வள்ளி 
      புரிகுழன்மேன் மாலை புனைந்தான்-சரணளித்து 
      மேலாய வானோர் வியன்சேனை தாங்கினான் 
      வேலா னிடைகிழித்தான் வெற்பு.
      (தண்டி-மேற்) (61) 
      பின்வரு நிலையணி 
      1215. மொழியப் பட்ட பாமுற்
      போந்த 
            பெயரே பின்னும் பெயர்ந்து வருவது 
            பின்வரு நிலையெனப் பேசப்
      படுமே. 
      என்பது, சொல்லிய செய்யுளின்
      முன்வந்த சொல்லே பின்னும் பெயர்ந்து 
      பலவிடங்களினும் வருவது பின்வருநிலையணி. 
      (வ-று.) 
      வைகலும் வைகல் வரக்கண்டு
      மஃதுணரார் 
      வைகலும் வைகலை வைகுமென்
      றின்புறுவர் 
      வைகலும் வைகற்றம் வாணாண்மேல் வைகுதல் 
      வைகலை வைத்துணரா தார்.
      (நாலடியார்) (62) 
      முன்னவிலக்கணி 
      1216. கோதறு மொருபொருள்
      குறிப்பிற் றடுப்பது 
            முன்ன விலக்கென மொழியப்
      படுமே. 
      என்பது, ஒருபொருளைக்
      குறிப்பினால் விலக்குவது முன்னவிலக்கணி. 
      (வ-று.) 
      முல்லைக் கொடிநடுங்க
      மொய்காந்தள் கைகுலைப்ப 
      எல்லை யினவண்
      டெழுந்திரங்க-மெல்லியன்மேல் 
			
				
				 |