அணியதிகாரம் | 536 | முத்துவீரியம் |
என்பது, பொருந்தாதபொருளைச்
சேர்த்துமுடிப்பது பிறபொருள் வைப்பு.
(வ-று.)
ஆர வடமு மதிசீத சந்தனமும்
ஈர நிலவு மெரிவிரியும்-பாரிற்
றுதிவகையான் மேம்பட்ட துப்புரவுந் தத்தம்
விதிவகையான் வேறு படும்.
(தண்டி-மேற்) (66)
கூடாவியற்கை யெனினுமமையும்.
கூடும் இயற்கை
1220. கூடும் பொருளைக் கூட்டி
யுரைப்பது
கூடுமி யற்கையாங் குறிக்குங் காலே
என்பது, கூடும்பொருளைச்
சேர்த்துக்கூறல் கூடுமியற்கை
வேற்றுப்பொருள்வைப்பணி.
(வ-று.)
பொய்யுரையா நண்பர் புனைதேர்
நெறிநோக்கிக்
கைவளைசோர்ந் தாவி கரைகுவரான்-மெய்வெதும்பப்
பூத்தகையுஞ் செங்காந்தட்
பொங்கொலிநீர் ஞாலத்துத்
தீத்தகையார்க் கீதோ செயல்.
(தண்டி-மேற்) (67)
இருமை இயற்கை
1221. இருமையு மியைவன விருமை
யியற்கை.
என்பது, கூடாவியற்கையும்
கூடுமியற்கையும் பொருந்துவன இருமை யியற்கை
வேற்றுப்பொருள் வைப்பணி.
(வ-று.)
கோவலர்வாய் வேய்ங்குழலே
யன்றிக் குரைகடலுங்
கூவித் தமியோரைக்
கொல்லுமால்-பாவாய்
பெரியோரும் பேணாது செய்வரே
போலுஞ்
சிறியோர் பிறர்க்கியற்றுந் தீங்கு. (தண்டி-மேற்) (68)
வேற்றுமையணி
1222. உரைப்பினுங் குறிப்பினு
மொப்புடை யிருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை
யாகும்.
|