அணியதிகாரம்537முத்துவீரியம்

என்பது, சொல்லினானும் குறிப்பினானும் ஒப்புடைய இரண்டு பொருள்
வேற்றுமைப்படவரல் வேற்றுமையணி.

(வ-று.)

அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரு மொப்பர்மற்-றிங்கண்
மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வ ரொருமா சுறின்.

வேற்றுமையெனினும் விதிரேகமெனினுமாம். (69)

பொருள் வேற்றுமை

1223. பொருள்வேற் றுமைப்படல் பொருள்வேற் றுமையே.

என்பது, பொருள் வேற்றுமைப்படுவது பொருள் வேற்றுமையணி.

(வ-று.)

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் வையத் திருளகற்று-மாங்கவற்றுண்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேரில் லாத தமிழ். (தண்டி-மேற்) (70)

சாதி வேற்றுமை

1224. சாதிவேற் றுமைப்படு வதுசாதி யாகும்.

என்பது, சாதி, வேற்றுமைப்படல் சாதி வேற்றுமையணி.

(வ-று.)

வெங்கதிர்க்குஞ் செந்தீ விரிசுடர்க்கு நீங்காது
பொங்கு மதியொளிக்கும் போகாது-தங்கும்
வளமையான் வந்த நெறிமயங்கு மாந்தர்க்
கிளமையான் வந்த விருள். (தண்டி-மேற்) (71)

குண வேற்றுமை

1225. குணம்வேற் றுமைப்படு வதுகுண மாகும்.

என்பது, குணம் வேற்றுமைப்படல் குண வேற்றுமையணி.