அணியதிகாரம் | 538 | முத்துவீரியம் |
(வ-று.)
சுற்றுவிற் காமனுஞ்
சோழர்
பெருமானாங்
கொற்றப்போர்க் கிள்ளியுங் கேழொவ்வார்-பொற்றொடி
ஆழி யுடையான் மகன்மாயன் சேயனே
கோழி யுடையான் மகன். (தண்டி-மேற்)
மாயன் - கறுப்பு. சேயன் - சிவப்பு.
கோழி - உறையூர். (72)
முயற்சி வேற்றுமை
1226. முயற்சியால் வேறு
படுவது முயற்சி
வேற்றுமை யென்மனார் மெய்யுணர்ந்
தோரே.
என்பது, முயற்சியால் வேறுபடல்
முயற்சி வேற்றுமையணி.
(வ-று.)
புனனாடர் கோமானும்
பூந்துழாய்
மாலும்
வினைவகையான் வேறு படுவர்-புனனாடன்
ஏற்றெதிர்ந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவனும்
ஏற்றிரந்து கொண்டமையா லின்று. (தண்டி-மேற்) (73)
இருபொருள் வேற்றுமை
1227. இருபொருள் புணர்ந்தவற்
றியல்பெடுத் துரைப்பில்
ஏய்ப்பினு முயரினு மிருபொருள்
வேற்றுமை.
என்பது, இரண்டு பொருள்கூடி
அவற்றி னிலக்கணம் கூறுங்கால், ஒப்பினும்
உயரினும் இருபொருள் வேற்றுமையணி.
(வ-று.)
மலிதேரான் கச்சியு மாகடலுந்
தம்முள்
ஒலியும் பெருமையு மொக்கும்-மலிதேரான்
கச்சி படுவ கடல்படா கச்சி
கடல்படுவ வெல்லாம் படும்.
(தண்டி-மேற்) (74)
விலக்கு வேற்றுமை
1228. வருபொரு
ளொதுக்கிவேற் றுமைப்பட வருவது
விலக்குவேற் றுமையென விளம்பப்
படுமே.
என்பது, வருகிற பொருளை
விலக்கி வேற்றுமைப்படவரல் விலக்கு
வேற்றுமையணி.
|