எழுத்ததிகாரம்54முத்துவீரியம்

(வ-று.) விள, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, பிறவுமன்ன.

(வி-ரை.)

‘‘ஞநமயவ வெனும் முதலாகு மொழியும்
உயிர்முத லாகிய மொழியும் உளப்பட
அன்றி யனைத்தும் எல்லா வழியும்
நின்ற சொன்முன் இயல்பா கும்மே’’ (தொல் - தொகை - 2)

எனத் தொல்காப்பியரும்,

‘‘எண்மூ வெழுத்தீற் றெவ்வகை மொழிக்கும்
முன்வரும் ஞநமய வக்கள் இயல்பும்’’

என நன்னூலாரும் கூற, இவர் வகாரத்தை மட்டும் நீக்கியதற்குக் காரணம் தெரிந்திலது. (26)

இதுவுமது

186. அவற்றுள்,
     மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார்.

(இ-ள்.) மேற்கூறிப் போந்தவற்றுள் மெல்லெழுத்துறழ்ந்து முடியினு நீக்காது கொள்வார்
புலவர்.

(வ-று.) கதிர் ஞெரி - கதிர்ஞ்ஞெரி; நொமாடா - நொம்மாடா.

(வி-ரை.) ‘அவற்றுள், மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார்; சொல்லிய
தொடர்மொழி யிறுதி யான’ (தொல் - தொகை -3) என்பது தொல்காப்பியம். இதனுள்
மூன்றாம் வரியை விலக்கியது இவ்விதி தொடர்மொழிக்கே யன்றி ஓரெழுத்தொரு
மொழிக்கும் கொள்ளுதற்கே யாம். இதனை இளம்பூரணர் வருமொழி முற்கூறியது கொண்டு
ஏற்றனர். எடுத்துக் காட்டில் கதிர்ஞெரி என்பது தொடர்மொழிக்கும். நொமாடா என்பது
ஓரெழுத்தொரு மொழிக்கும் உரியதாதல் காண்க. நன்னூலார், ‘நொதுமுன் மெலி மிகலுமாம்’
(உயிரி - 8) என எடுத்து விதப்பர். (27)

முன்னிலை வினை முன் வல்லினம்

187. வலிவரின் முன்னிலை வினையுறழ் தலும்விதி.

(இ-ள்.) முன்னிலை வினைமுன் க, ச, த,பக்கள் வரினியல்பு மிகலுமாம்.

(வ-று.) நடகொற்றா - நடக்கொற்றா