அணியதிகாரம்540முத்துவீரியம்

அதிசயவணி

1231. கவியாற் கருதப் படும்பொரு ளதனை
      உயர்த்திக் கூறுங் காலைநீ ருலக
      நடையிற வாநிலை நழுவா தான்றோர்
      வியப்ப ததிசய மென்மனார் புலவர்.

என்பது, செய்யுளாற் கருதப்படும் பொருளை மிகுத்துக் கூறுங்கால், உலக
வொழுக்கங் கெடாத நிலைமைத்தாகி, பெரியோர் வியப்பது அதிசயவணி.

பெருக்கணி யெனினும் ஒக்கும். (78)

பொருளதிசயம்

1232. பொருள்வியப் புடையது பொருளெனப் படுமே.

என்பது, பொருளாச்சரிய முடையது பொருளதிசயவணி.

(வ-று.)

பண்டுபுர மெரித்த தீமேற் படர்ந்தின்றும்
அண்ட முகடு நெருப்பறா-தொண்டளிர்க்கை
வல்லி தழுவக் குழைந்த வடமேரு
வில்லி நுதன்மேல் விழி. (தண்டி-மேற்) (79)

குணவதிசயம்

1233. குணம்வியப் புடையது குணமெனப் படுமே.

என்பது, குணமாச்சரியப் படுவது குணவதிசயம்.

(வ-று.)

மாலை நிலவொளிப்ப மாத ரிழைபுனைந்த
நீல மணிக ணிழலுமிழ-மேல்விரும்பிச்
செல்லு மிவள்குறித்த செல்வன்பாற் சேர்தற்கு 
வல்லிருளா கின்ற மறுகு. (தண்டி-மேற்) (80)

துணிவதிசயம்

1234. துணிபொருட் பெருக்கந் துணிவெனப் படுமே.

என்பது, துணிந்த பொருளின் மிகுதியைக் கூறல் துணிவதிசயம். தொழி
லதிசயமெனினு மொக்கும்.