அணியதிகாரம் | 541 | முத்துவீரியம் |
(வ-று.)
ஆளுங் கரியும் பரியுஞ் சொரிகுருதி
தோளுந் தலையுஞ் சுழித்தெறிந்து-நீளுமுயர்
வள்வார் முரசு மறிதிரைமேற் கொண்டொழுக
வெள்வா ளுறைகழித்தான் வேந்து. (தண்டி-மேற்) (81)
திரிபதிசயம்
1235. திரிந்து வருவது திரிபென
மொழிப.
என்பது, மாறுபட்டுவரல்
திரிபதிசயம்.
(வ-று.)
திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி
வள்ளத்துப்
பைங்கிள்ளை பாலென்று வாய்மடுப்ப-அங்கயலே
காந்தர் முயக்கொழிந்தார்
கைவறிதே நீட்டுவரால்
ஏந்திழையார் பூந்துகிலா மென்று.
(தண்டி-மேற்) (82)
தற்குறிப் பேற்றவணி
1236. அசர சரமிரண் டாகிய
பொருளினும்
அரிதியல் பால்விளை திறனலா
தாங்குக்
கவிதா னொருபொருள் கருதிமற்
றவற்றிற்
சார்த்தி யுரைப்பது தற்குறிப்
பேற்றம்.
என்பது, பெயரல் பொருளும்
பெயர்பொருளுமாகிய இருபொருளினும் இயல்பாக
நிகழும் தன்மையன்றிச் செய்யுள் தானொன்றை யெண்ணியவற்றின்கண்
வைத்துக் கூறல்
தற்குறிப்பேற்றவணி.
(வ-று.)
அசரம்.
வேனில் வெயிற்குலர்ந்த
மெய்வறுமை கண்டிரங்கி
வானின் வளஞ்சுரந்த வண்புயற்குத்-தானுடைய
தாதுமே தக்க மதுவுந் தடஞ்சினையாற்
போதுமீ தேந்தும் பொழில்.
(தண்டி-மேற்)
சரம்.
மண்படு தோட்கிள்ளி மதயானை
மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த
வெகுளியால்-விண்படர்ந்து
|