அணியதிகாரம்542முத்துவீரியம்

பாயுங்கொ லென்று பனிமதியம் போல்வதூஉந்
தேயுந் தெளிவிசும்பி னின்று. (தண்டி-மேற்) (83)

ஏதுவணி

1237. ஓதுமே தேனு மொருபொருட் டிறத்தால்
      ஈது விளைந்ததென் றியம்புவ தேது.

என்பது, யாதேனு மொருபொருளின் திறத்தினால் ஈதுண்டானதென்று கூறல் ஏது.

(வ-று.)

எல்லைநீர் வையகத் தெண்ணிறந்த வெவ்வுயிர்க்குஞ்
சொல்லரிய பேரின்பந் தோன்றியதான்-முல்லைசேர்
தாதலைத்து வண்கொன்றைத் தாரலைத்து வண்டார்ப்பப்
பூதலத்து வீழ்ந்த புயல். (தண்டி-மேற்) (84)

நுட்பவணி

1238. அறிந்துவே றாயறை யாது குறிப்பினுங்
      தொழிலினு மரிதுணர் தொழிற்றிற னுட்பம்
      ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, தெரிந்து கொண்டு வேறுபடக் கூறாமல், குறிப்பினானாதல்,
வினையினானாதல் அரிதாக நோக்கியறியும் வினைத் தன்மையையுடையது நுட்பம்.

(வ-று.)

குறிப்பு.

காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததாற்
பேதைய ராயம் பிரியாத-மாதர்
படரிருள்கால் சீய்க்கும் பகலோனை நோக்கிக்
குடதிசையை நோக்குங் குறிப்பு. (தண்டி-மேற்)

தொழில்.

பாடல் பயிலும் பணிமொழி தண்பணைத்தோள்
கூடல வாவிற் குறிப்புணர்த்து- மாடவர்க்கு
மென்றீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
இன்றீங் குறிஞ்சி யிசை. (தண்டி-மேற்) (85)