அணியதிகாரம்543முத்துவீரியம்

இலேசவணி

1239. தான்கரு தியவெளிப் படுக்குஞ் சத்துவம்
      வேறொன் றாலே விளைந்தன வாக
      மறைத்துக் கூறுவ திலேச மாகும்.

என்பது, தான் கருதியது வெளிப்படுக்கும் சத்துவங்களை வேறொன்றால் நடந்ததாக
மறைத்துக் கூறல் இலேசவணி.

(வ-று.)

கல்லுயர்தோட் கிள்ளி பரிதொழுது கண்பனிசோர்
மெல்லியலார் தோழியர்முன் வேறொன்று-சொல்லுவராற்
பொங்கும் படைபரப்பி மீதெழுந்த பூந்துகள்சேர்ந்
தெங்கண் கலுழ்ந்தனவா லென்று, (தண்டி-மேற்) (86)

இதுவுமது

1240. ஒன்றனைப் பழித்தும் புகழ்ந்து முரைப்பது
      மற்றதன் பாற்படும் வழுத்துங் காலே.

என்பது, ஒன்றைப் பழித்தும் புகழ்ந்துங் கூறலும் அவ்விலேசமாம்.

(வ-று.)

பழிப்பு.

ஆடன் மயிலியலி யன்ப னணியாகங்
கூடுங்கான் மெல்லென் குறியறியா-னூடல்
இளிவந்த செய்கை யிரவாளன் யாண்டும்
விளிவந்த வேட்கை யிலன். (தண்டி-மேற்)

புகழ்.

மேய கலவி விளைபொழுது மெல்லென்னுஞ்
சாய றளராமற் றாங்குமாற்-சேயிழையாய்
போர்வேட்ட மேன்மைப் புகழாளன் யான்விரும்பும்
தார்வேட்ட தோள்விடலை தான். (தண்டி-மேற்) (87)

சுவையணி

1241. புந்தியி னிகழ்திறன் புறத்துப் புலனாய்
     விளங்க லெண்வகை மெய்ப்பாட் டானும்
     ஒழுகல் சுவையென வுரைக்கப் படுமே.