அணியதிகாரம்546முத்துவீரியம்

(வ-று.)

மின்னிகரா மாதே விரைச்சாந் துடன்புணர்ந்து
நின்னிகரா மாதவிக்கீழ் நின்றருணீ-தன்னிகராம்
செந்தீ வரமலருஞ் செங்காந்தட் போதுடனே
இந்தீ வரங்கொணர்வல் யான். (தண்டி-மேற்) (91)

உதாத்தவணி

1245. ஆக்கத் துயர்வு மகத்தின துயர்வு
      மிகுதி யாக விளம்புவ துதாத்தம்.

என்பது, செல்வத்துயர்ச்சியையும், உள்ளத்துயர்ச்சியையும் மிகுத்துக் கூறல்
உதாத்தவணி.

(வ-று.)

செல்வமிகுதி:

கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்
என்றும் வறியோ ரினங்கவர்ந்து-மொன்றும்
அறிவரிதாய் நிற்கு மளவினதா லம்ம
செறிகதிர்வேற் சென்னி திரு. (தண்டி-மேற்)

உள்ளமிகுதி:

மண்ணகன்று தன்கிளையி னீங்கி வனம்புகுந்து
பண்ணுந் தவத்தியைந்து பார்த்தன்றா-னெண்ணிறந்த
மீதண்டர் கோன்குலையும் வெவ்வசுரர் வேரறுத்தான்
கோதண்ட மேதுணையாக் கொண்டு. (தண்டி-மேற்) (92)

அவநுதியணி

1246. கோதறு சிறப்பினுங் குணத்தினும் பொருளினும்
      உண்மையை விலக்கிவே றொன்றா யறைகுவ
      தவநுதி யென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, சிறப்பினும், குணத்தினும், பொருளினும் உண்மையை மறுத்துப்
பிறிதொன்றாகக்கூறல் அவநுதியணி.

(வ-று.)

சிறப்பு:

நறைகமழ்தார் வேட்டார் நலனணியு நாணு
நிறையு நிறைதளரா நீர்மை-யறநெறிசூழ்
செங்கோல னல்லன் கொடுங்கோலன் றெவ்வடுபோர்
வெங்கோப மால்யானை வேந்து. (தண்டி-மேற்)