அணியதிகாரம் | 547 | முத்துவீரியம் |
குணம்:
மனுப்புவிமேல் வாழ மறைவளர்க்கு
மாரப்
பனித்தொடையற் பார்த்திபர்கோ னெங்கோன்-தனிக்கவிகை
தண்மை நிழற்றன்று தற்றொழுத பேதையர்க்கு
வெம்மை நிழற்றாய் விடும்.
(தண்டி-மேற்)
பொருள்:
நிலனாம் விசும்பா நிமிர்கானீர்
தீயாம்
அலர்கதிராம் வான்மதியா மன்றி-மலர்கொன்றை
ஒண்ணறுந் தாரா னொருவனிய மானனுமாய்
எண்ணிறந்த வெப்பொருளு மாம்.
(தண்டி-மேற்) (93)
சிலேடையணி
1247. ஒருவகை யாந்தொட ருரைபல
பொருளின்
இயல்பு புலப்பட வியம்பல்
சிலேடை.
என்பது, ஒருவகையாகிய
தொடர்மொழி பலபொருள்களின் தன்மை தோன்றக்கூறல்
சிலேடை.
(வ-று.)
செம்பொன்பதின்றொடி -
செம்பொன் பதின்றொடி,
செம்பு ஒன்பதின்றொடி. (94)
விசேடவணி
1248. குணந்தொழில் பொருளுடல்
குலமுத
லாயின
எச்சங் காரண மாகவோர் பொருட்கு
மேம்பாடு தோன்ற விளம்பல்
விசேடம்.
என்பது, குணமும், தொழிலும்,
பொருளும், அவயவமும், சாதியுமுதலியன
குறைபடுதல் காரணமாக ஒருபொருளுக்கு மேம்பாடு தோன்றக்
கூறல் விசேடவணி.
(வ-று.)
குணவிசேடக்குறை:
கோட்டந் திருப்புருவங் கொள்ளா
வவர்செங்கோல்
கோட்டம் புரிந்த கொடைச்சென்னி-நாட்டஞ்
சிவந்தன வில்லைத் திருந்தார் கலிங்கஞ்
சிவந்தன செந்தீத் தெற. (தண்டி-மேற்)
தொழிற்குறை விசேடம்:
ஏங்கா மழைபொழியா
நாளும்
புனலோங்கும்
பூங்கா விரிநாடன் போர்மதமா-நீங்கா
|