| அணியதிகாரம் | 552 | முத்துவீரியம் |  
  
     பகரப்
      பட்டுப் பலபாட் டாக 
           வருநவு மாமென வழுத்தினர் புலவர். 
      என்பது, முற்கூறியவற்றுள்,
      தொகைநிலைச் செய்யுள், பலரானுரைக்கப் பட்டுப் 
      பலபாட்டாக வருநவும், ஒருவரானுரைக்கப்
      பட்டுப் பலபாட்டாக வருநவுமாம். 
      பலரானுரைக்கப்பட்டது
      நெடுந்தொகை. ஒருவரானுரைக்கப்பட்டது
      திருக்குறள். (2) 
      இதுவுமது 
      1260. அவைதாம், 
            கருதரு பொருளிடங் காலந் தொழிலெனு 
            நான்கினும் பாட்டினு மளவினு
      நடக்கும். 
      என்பது, முற்கூறியவை, பொருளும்
      இடனும் காலமும் தொழிலும் ஆகிய 
      நான்கனோடு,
      பாட்டினும் அளவினும் வரும். 
      (வ-று.) 
      பொருளாற் றொகுத்தது-புறநானூறு. 
      இடத்தாற் றொகுத்தது-களவழிநாற்பது. 
      காலத்தாற் றொகுத்தது-கார்நாற்பது. 
      பாட்டாற் றொகுத்தது-கலித்தொகை. 
      அளவாற் றொகுத்தது-குறுந்தொகை. (3) 
      குளகச் செய்யுள் 
      1261. குளகம் பலபாட் டொருவினை
      கொள்ளும். 
      என்பது, குளகச் செய்யுள்
      பலபாட்டாய் ஒருவினையைக் கொண்டு முடியும்; 
      ஒருவினையென்ற விதப்பான் ஒரு பெயரையுங்
      கொண்டுமுடியும். 
      (வ-று.) வந்துழிக் காண்க. (4) 
      முத்தகச் செய்யுள் 
      1262. முத்தகச் செய்யுள் தனிநின்று
      முடியும். 
      என்பது, முத்தகச் செய்யுள்
      தனித்துநின்று முடியும். 
      (வ-று.) 
      அகர முதல வெழுத்தெல்லா
      மாதி 
      பகவன் முதற்றே யுலகு. (குறள்-1) (5) 
			
				
				 |