அணியதிகாரம்555முத்துவீரியம்

சமதை

1272. எழுத்துநான் கடியுமொத் தியல்வது சமதை.

என்பது, நான்கடியுமெழுத்துக்களொத்துவரல் சமதைச் செய்யுள்.

(வ-று.)

வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்குங் கனங்குழையே. 

(திருக்-15) (15)

பொருட்டெளிவு

1273. பொருளா லறிவது பொருட்டெ ளிவாகும்.

என்பது, பொருளாலறிதல் பொருட்டெளிவுச்செய்யுள்.

(வ-று.)

காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி. (குறள்-1131) (16)

இன்பம்

1274. மொழிதரு முற்றிய மோனையைப் பெறுவன
      வின்ப மென்மனா ரியல்புணர்ந் தோரே.

என்பது, முற்றுமோனையைப் பெறல் இன்பச் செய்யுள்.

(வ-று.)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை. (குறள்-15) (17)

உதாரம்

1275. உதாரமீ கையைப்புகழ்ந் துரைப்பதா மெனலே.

என்பது, கொடையைப்புகழ்ந்து கூறல் உதாரச்செய்யுள்.

(வ-று.)

இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள. (குறள்-223) (18)