அணியதிகாரம் | 556 | முத்துவீரியம் |
புலம்
1276. பொருள்புலப் படல்புல னாமென
மொழிப.
என்பது, பொருள் வெளிப்படத்
தோன்றல் புலச்செய்யுள்.
(வ-று.)
நன்றி மறப்பது நன்றன்று
நன்றல்ல
தன்றே மறப்பது நன்று. (குறள்-108) (19)
சுகுமாரதை
1277. வண்கண மொழிதர வருஞ்சுகு
மாரதை.
என்பது, வல்லெழுத்துக்களின்றி
வரல் சுகுமாரதைச் செய்யுள்.
(வ-று.)
யானை யால்யா னையைமே வுவரான்
வினையால் வினைமையு மாம். (20)
காந்தி
1278. பொருட்பொலி வாற்புகழ்ந்
துரைப்பது காந்தி.
என்பது, பொருண்மிகுதியால்
புகழ்ந்துரைத்தல் காந்திச் செய்யுள்.
(வ-று.)
தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி
னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு. (குறள்-1103) (21)
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
1279. எழுவாய் நதிப்புன லெனப்பய
னிலையொடு
முடிவன வாற்றுநீ ராமென மொழிப.
என்பது, அடிமுதலாற்று நீரைப்போல
இறுதியோடு முடிவன ஆற்று
நீர்ப்பொருள்கோட்
செய்யுள்.
(வ-று.)
சொல்லருஞ் சூற்பசும் பாம்பின்
றோற்றம்போன்
மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்
செல்வமே போற்றலை நிறீஇத் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே.
(சீவகசிந்தாமணி) (22)
|