அணியதிகாரம் | 557 | முத்துவீரியம் |
மொழிமாற்றுப் பொருள்கோள்
1280. ஏற்ற பொருளுக் கியையு
மொழிகளை
மாற்றியோ ரடியுள் வழங்கல்மொழி
மாற்றே.
என்பது, தன்னையேற்ற
பொருள்களுக்குப் பொருந்திய சொற்களை
மாற்றி
யோரடிக்குள் வழங்கல் மொழிமாற்றுப்பொருள்
கோட்செய்யுள்.
(வ-று.)
சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை. (23)
அடிமறிமாற்றுப் பொருள்கோள்
1281. அடியெலாந் தன்னிலை மாறி
முதலினு
மீற்றினு மிடையினு மெடுத்துச்
சரிப்பினு
மோசையும் பொருளு மொழுகாது வருவன
அடிமறி மாற்றென வறையப்
படுமே.
என்பது, எல்லாவடிகளும்
தன்னிலைமாறி முதலினும் கடையினும் நடுவினும்
எடுத்து உச்சரிப்பினும் அதனோசையும் பொருளுங்
கெடாதுவரல் அடிமறிமாற்றுப்
பொருள்கோட் செய்யுள்.
(வ-று.)
கற்ற கழிநூலுங் கைகூடா முற்றிற்கு
முற்ற பொருளு மொழிந்தகலு-நற்சுருதி
யோதலும்போய்ப் பெற்ற வொளிநீத் திகழ்வாங்குத்
தாத னுளத்தழன்றக் கால். (24)
நிரனிறைப் பொருள்கோள்
1282. பெயரும் வினையுமாஞ்
சொல்லையும் பொருளையு
நிரனிறை யாக நிறுத்திமற்
றொருபொரு
ணேரும் பொருள்கோ ணிரனிறை
யாகும்.
என்பது, பெயரும் வினையுமாகிய
சொல்லையும் பொருளையும் நிரனிறையாக
நிறுத்தி, வேறுபொருணேரும் பொருள்கோள்
நிரனிறைப்பொருள்கோட் செய்யுள்.
(வ-று.)
கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண்
மேனி
மதிபவள முத்த முகம்வாய் முறுவல்
|