அணியதிகாரம்558முத்துவீரியம்

பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்
வடிவினளே வஞ்சி மகள். (25)

அளைமறிபாப்புப் பொருள்கோள்

1283. இயற்பா விறுமொழி யிடையினு முதலினுங்
      கூட்டிப் பொருளைக் கொள்ளுவ தளைமறி
      பாப்பா மெனப்பெயர் பகரப் படுமே.

என்பது, செய்யுளிறுதிமொழியை இடையினும் முதலினும் கூட்டிப்
பொருளைக்கொள்வது அளைமறிபாப்புப் பொருள்கோட் செய்யுள்.

(வ-று.)

தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் திரிவார் தாமும்
சூழ்ந்த வினையாக்கைச் சுடவிளிந்து தீநரகிற் சுழல்வார் தாமும்
மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும்
வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே. (26)

பூட்டுவிற் பொருள்கோள்

1284. எழுவா யிறுதி நிலைமொழி தம்முட்
      பொருணோக் குடையது பூட்டுவில் லாகும்.

என்பது, முதல் இறுதிநிலை மொழிப்பொருள் நோக்குடையது பூட்டுவிற்
பொருள்கோட் செய்யுள்.

(வ-று.)

திறந்திடுங்கை வேன்முருகன் சீரடியைக் காணி
லறந்திகழு மாங்கக் தகவு. (27)

தாப்பிசைப் பொருள்கோள்

1285. இடைமொழி முதலினு மீற்றினு மெய்தித்
      தருவது பொருளைத் தாப்பிசை யாகும்.

என்பது, நடுவேநின்ற சொல் முதலினும் கடையினும் சென்று பொருளைத்தருவது
தாப்பிசைப்பொருள் கோட்செய்யுள்.

(வ-று.)

உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு. (குறள்-255) ( 28)